முகப்பு
தமிழ்நாடு

விதவிதமான மோசடிகளுக்குப் பிறகும் இப்படி இருந்தால் எப்படி?

வெறும் செல்போன் எண் கிடைத்தால் போதும், அதை வைத்து ஆயிரம் வகையில் மோசடிகள் நடந்து வரும் நிலையில்,

Updated On : 30 ஜனவரி, 2018 at 12:31 PM
பகிர்:


சென்னை: வெறும் செல்போன் எண் கிடைத்தால் போதும், அதை வைத்து ஆயிரம் வகையில் மோசடிகள் நடந்து வரும் நிலையில், தமிழக அரசின் பொதுப்பணித் துறை இணையதளத்தில் அனைவரது தகவல்களும் பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுப்பணித் துறையின் இணையதளத்தில், ரேஷன் பொருட்களின் விநியோகம் மற்றும் கடைகளின் விவரங்கள் என அனைத்தும் பட்டியலிடப்பட்டு உள்ளது. இதில் யார் வேண்டுமானாலும், ஒரு நபரின் பெயர், முகவரி, ரேஷன் அட்டையின் எண், தொலைபேசி எண் என அனைத்தையும் ஒரு நொடியில் எந்த இடையூறும் இல்லாமம் பெற்றுக் கொள்ளலாம்.

ஒரு குடும்பத்தில் எத்தனை பெரியவர்கள் இருக்கிறார்கள், எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள், அந்த நபரின் முகவரி, அவர் வைத்திருக்கும் ரேஷன் அட்டையின் வகை என்ன? அவரது குடும்பத்துக்கு சிலிண்டருக்கான மானியம் கிடைக்கிறதா? என அனைத்தையும் வாரி வாரி வழங்குகிறது இந்த இணையதளம்.

Advertisement

இதில் தமிழக மக்கள் ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே நினைத்து நிம்மதி பெருமூச்சு விடலாம். இவ்வளவும் தெரிந்த பிறகு நிம்மதி பெருமூச்சு விடுவது எப்படி என்று கேட்கலாம்.. அது வேறு. இது என்னவென்றால், அதில் இன்னும் ஆதார் எண் மட்டும் பதிவாகவில்லை என்பதே.

இது பற்றி தமிழ்நாடு பொது வழங்கல் துறை ஆணையர் எஸ். மதுமதியிடம் கேட்டதற்கு, "இதில் எந்த பிரச்னையும் இல்லை. இதில் எந்த தனிநபர் உரிமை மீறலும் செய்யப்படவில்லை" என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.