முகப்பு
தமிழ்நாடு

அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு முட்டை சப்ளை செய்த நிறுவனத்தில் வருமானவரி சோதனை

அரசுப்பள்ளிகள்,அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் அங்கான்வாடி மையங்களுக்கு சத்து மாவு,முட்டை,பருப்பு போன்றவைகளை விநியோகம் செய்து வரும் திருச்செங்கோடு தனியாா் நிறுவனத்தில்  வருமான வரி.. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:08 PM
பகிர்:

திருச்செங்கோடு: அரசுப்பள்ளிகள்,அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் அங்கான்வாடி மையங்களுக்கு சத்து மாவு,முட்டை,பருப்பு போன்றவைகளை விநியோகம் செய்து வரும் திருச்செங்கோடு தனியாா் நிறுவனத்தில்  வருமான வரித்துறையினா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த ஆண்டிப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் 15 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினா் காலையில் சோதனையில் ஈடுபட்டனா். மேலும் இந்த நிறுவனத்தின் முக்கிய அலுவலா்கள் வீடுகள், அவர்களது நண்பா்கள் மற்றும் உறவினா்கள் வீடுகள், சேமிப்பு கிடங்குகள், தொடா்பு நிறுவனங்கள் போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டனா். 

சோதனையில் கைபற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நிறுவன அலுவலா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெறும் பகுதிகளில் காவல்துறையினா் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
 

முழு கட்டுரையைப் படிக்க →