தமிழ்நாடு

ரஜினியும் கமலும் ஒன்று சேர்ந்தால் தமிழ்நாட்டில் வறட்சிதான் ஏற்படும்: அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் 

DIN

சென்னை: அரசியல் களத்தில் நடிகர்கள் ரஜினியும் கமலும் ஒன்று சேர்ந்தால் தமிழ்நாட்டில் வறட்சிதான் ஏற்படும் என்று  அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்துள்ள தனியார் காட்டில் "சண்டைக்கோழி- 2' படத்துக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள நடிகர் விஷால் புதனன்று செய்தியாளர்களிடம்  பேசும் பொழுது, "கமல் மற்றும் ரஜினி ஆகியோர் இணைந்து அரசியலில் ஈடுபட்டால் ஆதரவு அளிப்பேன்.அவர்கள் இருவரும் அரசியல் களத்தில் ஒன்றுபட்டு செயல்பட்டால் தமிழகத்தில் புரட்சி உண்டாகும்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் அரசியல் களத்தில் நடிகர்கள் ரஜினியும் கமலும் ஒன்று சேர்ந்தால் தமிழ்நாட்டில் வறட்சிதான் ஏற்படும் என்று  அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் வியாழனன்று பேசிய அவரிடம் விஷாலின் கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்பொழுது அவர் கூறியதாவது;

அரசியல் களத்தில் நடிகர்கள் ரஜினியும் கமலும் ஒன்று சேர்ந்தால் தமிழ்நாட்டில் புரட்சியெலாம் ஏற்படாது; வறட்சிதான் ஏற்படும். இங்கு யார் ஒன்று சேர்ந்தாலும் எதுவும் செய்ய முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

SCROLL FOR NEXT