ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியதாவது:
வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை தாக்கம் காரணமாக,
Advertisement
கோவை மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக காணப்படும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கோவை மாவட்டம், சின்னக் கல்லாறில் 110 மி.மீ. மழை பதிவானது. வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் தென்மேற்கு திசையிலிருந்து மேற்கு நோக்கி மணிக்கு 60 கி.மீ வேகத்திலும் பலமான காற்று வீசக்கூடும் என்றார்.