முகப்பு
தமிழ்நாடு

கோடைக் காலம் முடிந்தும் மின்தேவை அதிகரிப்பு

தமிழகத்தில் கோடைக் காலம் முடிவடைந்தும், மாநிலத்தின் மின்தேவை 15,200 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On : 10 ஜூலை, 2018 at 4:27 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:41 PM

தமிழகத்தில் கோடைக் காலம் முடிவடைந்தும், மாநிலத்தின் மின்தேவை 15,200 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியது:
தமிழகத்தில் பருவமழை குறைந்துள்ளதால் மின்தேவை மீண்டும் 15,000 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. தமிழக மின்வாரியத்தில் 2.89 கோடிக்கும் அதிகமாக மின்நுகர்வோர் உள்ளனர். இவர்களுக்கு சராசரியாக நாளொன்றுக்கு 13,500 மெகாவாட் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் ஏப்ரல், மே மாதம் போன்ற கோடைக் காலங்களில் பொதுமக்கள் ஏசி, பிரிட்ஜ் மற்றும் மின்விசிறியை அதிகம் பயன்படுத்துவதால் மின்தேவையும் அதிகரிக்கும். இதனால் கடந்த கோடை மாதமான ஏப்ரலில் 13,500 மெகாவாட்டில் இருந்து 15,000 மெகாவாட்டாக மின்பயன்பாடு அதிகரித்தது. இதற்கிடையில், தென்மேற்கு பருவமழையால் கோவை, நீலகிரி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஜூன் 20 -ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்தது. பிற மாவட்டங்களிலும் வெப்பச் சலனத்தால் அவ்வப்போது மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்ததை அடுத்து இக்காலக்கட்டத்தில் மின்பயன்பாடு குறைந்திருந்தது.
ஆனால் கடந்த சில தினங்களாக ஒருசில இடங்களில் மழை பெய்தாலும், வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருப்பதை அடுத்து மின் பயன்பாடு அதிகரித்து மீண்டும் 15,000 மெகாவாட்டை கடக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் அதிகபட்ச மின்தேவை, கடந்த வியாழக்கிழமை 15,122 மெகாவாட் ஆக இருந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.