முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்துக்கு நீர் வரும் ஆற்றுப்பாதையில் 15 இடங்களில் தடுப்பணைகள் கட்ட ஆந்திர அரசு திட்டம்

ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு நீர் வரும் ஆறுகளின் பாதையில் சுமார் ரூ.6 கோடியில் ஆந்திர அரசு 15 இடங்களில் தடுப்பணைகளைக் கட்ட திட்டமிட்டுள்ளது.

Updated On : 9 ஜூலை, 2018 at 12:47 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு நீர் வரும் ஆறுகளின் பாதையில் சுமார் ரூ.6 கோடியில் ஆந்திர அரசு 15 இடங்களில் தடுப்பணைகளைக் கட்ட திட்டமிட்டுள்ளது.

ஆந்திராவில் இருந்து பாயும் ஆறுகளுக்கு குறுக்கே தமிழக எல்லைக்கு அருகே தடுப்பணை கட்டும் ஆந்திரா அரசு, ஒவ்வொரு தடுப்பணையையும் தலா ரூ.40 லட்சம் செலவில் கட்டவும் நிதி ஒதுக்க உள்ளது.

லவா, குசா ஆகிய இரு ஆறுகள் தமிழகத்துக்கு அருகே இணைந்து கொசஸ்தலை ஆறாகிறது. இதில் குசா ஆற்றுக்குக் குறுக்கே எஸ்ஆர்புரம் தொடங்கி, தமிழக எல்லை வரை இந்த தடுப்பணைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 

Advertisement

குசா ஆற்றில் தடுப்பணைகள் கட்டப்பட்டால், கொசஸ்தலை ஆற்றில் இருந்து வரும் நீரின் அளவு குறையும். இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.