முகப்பு
தமிழ்நாடு

பிளாஸ்டிக் தடையைச் செயல்படுத்த மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையைச் செயல்படுத்த மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 10 ஜூலை, 2018 at 1:30 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:41 PM

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையைச் செயல்படுத்த மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தவும் உற்பத்தி செய்யவும் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படும் என முதல்வர் கே.பழனிசாமி கடந்த ஜூன் 5-ஆம் தேதி பேரவையில் அறிவித்தார். 
இதைத் தொடர்ந்து தொழிற்சாலைகள், தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து பிளாஸ்டிக் தடையை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்காக பெரிய அளவிலான ஒருங்கிணைப்பு முயற்சி தேவைப்படுகிறது. இதை முன்னிட்டு பிளாஸ்டிக் தடையை திறன்படச் செயல்படுத்துவதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்ட பிராந்திய அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்தந்த மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர்கள், மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து ஒருங்கிணைப்பாளர்கள் செயல்படுவர் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
32 மாவட்டங்களுக்கு 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்: பிளாஸ்டிக் தடையை திறன்படச் செயல்படுத்த நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பெயர், ஒருங்கிணைப்புப் பணியை அவர்கள் செய்ய வேண்டிய மாவட்டங்களின் பெயர் குறித்த விவரம்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.