முகப்பு
தமிழ்நாடு

வால்பாறையில் கன மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வால்பாறையில் தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

Updated On : 10 ஜூலை, 2018 at 12:50 AM
கனமழை காரணமாக கூழாங்கல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

வால்பாறையில் தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம், வால்பாறையில் தென்மேற்குப் பருவ மழை கடந்த 45 நாள்களாகப் பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணைகளுக்குத் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது.
இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக மழைப் பொழிவு குறைந்து காணப்பட்டது. இரவு நேரத்தில் மட்டும் மழை பெய்தது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வால்பாறை பகுதியில் மீண்டும் கன மழை பெய்து வருகிறது. விடியவிடிய பெய்த மழை திங்கள்கிழமையும் நீடித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் வால்பாறை பகுதி கல்லூரி, பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவான மழை அளவு (மி.மீ.) சின்னக்கல்லாறு 110, சோலையாறு 98. நீராறு 94, வால்பாறை 28. 
சோலையாறு அணைக்கு 2282.41 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 162.10 அடியாக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.