தமிழ்நாடு

காவலர்களுக்கு கட்டாய வார விடுப்பின் அவசியத்தை வலியுறுத்தும் நீதிபதி கிருபாகரன்

DIN


சென்னை: காவலர்களுக்கு கட்டாய வார விடுப்பு விஷயத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து வரும் 19ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார்.

காவல்துறையினருக்கு கட்டாய வார விடுப்பு வழங்குவது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல்துறையினருக்கு வார விடுப்பு அவசியம் என்று நீதிபதி கிருபாகரன் வலியுறுத்தினார்.

மேலும் அவர் கூறியதாவது, வார விடுப்பு என்பது ஆவணங்கள் அளவிலேயே உள்ளது. வாரவிடுப்பு நாட்களிலும் காவலர்கள் பணிக்கு அழைக்கப்படுகின்றன. வாரவிடுப்பு என்பது காவலர்களுக்கு மிகவும் அவசியம். விடுமுறை நாட்களை காவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் செலவிட வேண்டும். காவலர்களுக்கு கட்டாய வார விடுப்பு வழங்குவது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக ஜூலை 19ம் தேதிக்குள் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை கால பயிா்களில் வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

SCROLL FOR NEXT