தமிழ்நாடு

118 அடியைக் கடந்த மேட்டூர் அணை: 20 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

DIN

118 அடியைக் கடந்து நிரம்பி வரும் மேட்டூர் அணை, முழுக்கொள்ளளவை எட்டினால் மொத்த உபரி நீரும் தொடர்ந்து விடுவிக்கப்படவுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த கன மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின.  இதனால் இரு அணைகளின் பாதுகாப்புக் கருதி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. 

இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 64,595 கன அடியில் இருந்து 61,644 கன அடியாகச் சரிந்தது. 

இருப்பினும் சனிக்கிழமை காலை 114.63 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 118 அடியாக உயர்ந்தது. மேலும் விரைவில் அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் நீர் இருப்பு 88.73 டி.எம்.சியாக உள்ளது. இதனிடையே அணை நிரம்பினால் மொத்த உபரி நீரும் திறக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கக்கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT