தமிழ்நாடு

ஏழைப் பங்காளனாக ரஜினிகாந்த் நடிக்கும் கொடுமை: ட்விட்டரில் கிண்டல் செய்த ராமதாஸ் 

ஏழைப் பங்காளனாக ரஜினிகாந்த் நடிக்கும் கொடுமை என்று காலா திரைப்பட முன்பதிவுக் கட்டணம் குறித்து பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் கிண்டல் செய்துள்ளார்.

DIN

சென்னை: ஏழைப் பங்காளனாக ரஜினிகாந்த் நடிக்கும் கொடுமை என்று காலா திரைப்பட முன்பதிவுக் கட்டணம் குறித்து பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் கிண்டல் செய்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் வரும் 7-ஆம் தேதியன்று வெளியாக உள்ளது. இதற்கான ஆன்லைன் வழி முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் அதற்கு சாதாரண கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தற்பொழுது புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஏழைப் பங்காளனாக ரஜினிகாந்த் நடிக்கும் கொடுமை என்று காலா திரைப்பட முன்பதிவுக் கட்டணம் குறித்து பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் கிண்டல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

ஜோரா கைத்தட்டுங்க 1! காலா திரைப்படத்திற்கு முன்பதிவு தொடங்கியது. வழக்கமான அதிகபட்சக் கட்டணம் ரூ.165.78க்கு பதிலாக ரூ.207.24க்கு விற்கப்படுகிறதாம். இதில் கொடுமை என்னவென்றால் காலா திரைப்படத்தில் ஏழைப் பங்காளனாக நடிக்கிறாராம் ரஜினிகாந்த். ஏழைப் பங்காளன்... ஏழைப் பங்காளன்!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

SCROLL FOR NEXT