முகப்பு
தமிழ்நாடு

நிலுவைத் தொகை வழங்காவிட்டால் மீண்டும் போராட்டம்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நோட்டீஸ்

அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காவிடில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனப் போக்குவரத்துக் கழகங்கள்

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காவிடில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 
சென்னை பல்லவன் சாலையில் உள்ள தொமுச அலுவலகத்தில், போக்குவரத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதன் பின்னர் கூட்டம் தொடர்பாக நிர்வாகிகள் தரப்பில் கூறியது:
போக்குவரத்துத் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யும் பணத்தை அவரவர் கணக்கில் முறையாகச் செலுத்தாமல், தொடர்ந்து போக்குவரத்துக் கழகங்களே பயன்படுத்தி வருகின்றன. ரூ.5 ஆயிரம் கோடியாக இருந்த நிலுவைத் தொகை தற்போது ரூ.6 ஆயிரம் கோடியை நெருங்கி வருகிறது. மேலும் 13-ஆவது ஊதிய ஒப்பந்தப்படி வழங்கப்பட வேண்டிய அனைத்துத் தொகையையும், 2016 செப்டம்பர் 1-ஆம் தேதியிட்டு வழங்க வேண்டும்.
ஓய்வூதியதாரர்களுக்கான பணப் பலன்களை நிலுவை வைக்காமல் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து கோரிக்கைகள் தொடர்பாக தங்களை அழைத்துப் பேசி பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என போக்குவரத்து சங்கங்கள் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
நோட்டீஸ் வழங்கிய 2 வாரகாலத்துக்குப் பின்னர் பணியாளார்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்பது விதியாக உள்ளது. இந்நிலையில் வருகிற 19-ஆம் தேதியோ, அல்லது அதற்கு பின்னரோ வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →