தமிழ்நாடு

வடசென்னை அனல் மின்நிலையம்: 600 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தம்

DIN

சென்னை: வடசென்னை அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின்உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களில் காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்துள்ளதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சில தினங்களாக தென்மாவட்டங்களில் உள்ள காற்றாலைகள் மூலம் சுமார் 2 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தியாகிறது. 

இதையடுத்து இரு தினங்களுக்கு முன் வடசென்னை அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் அலகு 1-இன் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மேட்டூா் அனல் மின்நிலையத்தில் 210 மெகாவாட் அளவுக்கான மின்உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. 

காற்றாலை மின்சாரம் குறையும்போதோ, மின்தேவை அதிகரிக்கும்போதோ நிறுத்தி வைக்கப்பட்ட அனல்மின் நிலைய மின்உற்பத்தி மீண்டும் தொடங்கும் என்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேல் பிரதமருக்கு கைது வாரண்ட்? சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை

வாக்களித்த நட்சத்திரங்கள்..!

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: அமித் ஷா

வரப்பெற்றோம் (20-05-2024)

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யும்போது மறக்கக் கூடாது 5 விஷயங்கள்

SCROLL FOR NEXT