முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:16 PM
பகிர்:

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அகாரி சனிக்கிழமை கூறியது:

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். ஈரப்பதம் மிக்க பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. 

தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லார், வால்பாறை தாலுகா அலுவகத்தில் தலா 70 மி.மீ., கோவை மாவட்டம் பொள்ளாச்சி, நீலகிரி மாவட்டம் கூடலூா் பஜாரில் தலா 50 மி.மீ. மழை பதிவானது. 

நீலகிரி மாவட்டம் குந்தாபாலம், தேவாலாவில் தலா 40 மி.மீ. மழையும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை, தென்காசி, பாபநாசம், தேனி மாவட்டம் பெரியாறில் தலா 30 மி.மீ மழை பதிவானது.  தென்தமிழகம், கேரளா, கா்நாடக கடலோரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 10) மீன் பிடிக்க செல்லும் மீனவா்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்றார்.

தணிந்தது வெப்பம்: 

தென் பருவமழை தென் உள் கா்நாடகம், கேரளாவில் தற்போது தீவிரமடைந்துள்ளது. இதன் தாக்கத்தால், தமிழகத்தில் வெப்ப நிலை சனிக்கிழமை குறைந்தது. அதிகபட்சமாக, சென்னை மீனம்பாக்கத்தில் 101 டிகிரி வெப்பநிலை பதிவானது. நுங்கம்பாக்கத்தில் 98 டிகிரியும், நாகையில் 96 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.