தமிழ்நாடு

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக் குவிப்பு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவு

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN

தமிழகத்தின் பால்வளத் துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி உள்ளார். 2014-ஆம் ஆண்டில் இவர் மீது மகேந்திரன் என்பவர் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி உத்தரவிடப்பட்டது. 

ஆனால், அதன் மீதான விசாரணை அதன் பிறகு நடைபெறவில்லை. அதனால், மகேந்திரன் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று (செவ்வாய்கிழமை) ராஜந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கை எஸ்பி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ராஜேந்திர பாலாஜி 1996-ஆம் ஆண்டு திருத்தங்கள் ஊராட்சி துணை தலைவராக இருந்த போது முதல் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து முதல் அறிக்கையை வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி சமர்பிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னர், இந்த வழக்கின் மீதான அடுத்த விசாரணையை உயர்நீதிமன்றம் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.   

மனுதாரர் அளித்த புகாரின்படி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேவதானத்தில் 74 லட்ச ரூபாய்க்கு 35 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். ஆனால், இதன் உண்மையான மதிப்பு 6 கோடியாகும். அவர் இதுமட்டுமின்றி திருத்தங்களில் குறைந்த விலையில், வீட்டு மனை மற்றும் நிலம் வாங்கியுள்ளார். அதன் மதிப்புகள் சந்தை நிலவரப்படி 1 கோடியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT