முகப்பு
தமிழ்நாடு

அரக்கோணம் மார்கத்தில் விரைவு ரயில்களை விட பயணிகள் ரயில் வேகம் அதிகரிப்பு

சென்னை சென்டிரல் - அரக்கோணம் மார்க்கத்தில் விரைவு ரயில்களில் செல்லும் பயணிகளை விட, பயணிகள் ரயிலில் செல்லுவோரே விரைவாக தத்தமது ரயில் நிலையங்களுக்கு சென்றடையும் வகையில் தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.

Updated On : 15 ஜூன், 2018 at 4:34 PM
பகிர்:


சென்னை: சென்னை சென்டிரல் - அரக்கோணம் மார்க்கத்தில் விரைவு ரயில்களில் செல்லும் பயணிகளை விட, பயணிகள் ரயிலில் செல்லுவோரே விரைவாக தத்தமது ரயில் நிலையங்களுக்கு சென்றடையும் வகையில் தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.

பயணிகள் ரயிலின் வேகம் அதிகரித்ததன் காரணமாக, திருவனந்தபுரம், கன்னியாகுமரி, எர்ணாக்குளம், மங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வரும் விரைவு ரயில்களின் பயண நேரம் 30 முதல் 45 நிமிடம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பயண நேரம் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக கோவை - சென்னை விரைவு ரயில் அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையம் வர 2 மணி நேரம், 15 நிமிடம் எடுத்துக் கொண்டது. 

Advertisement

அதே சமயம், பயணிகள் மின்சார ரயில் இதே தூரத்தை வெறும் 1 மணி நேரம் 55 நிமிடங்களில் கடந்து செல்கிறது. இதனால், மின்சார ரயிலை அன்றாடப் பணிகளுக்காகப் பயன்படுத்தும் பயணிகளுக்கு அதிக வசதி ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.