தமிழ்நாடு

காங்கிரஸ் -திமுக ஆட்சியில் எய்ம்ஸ் அமைக்காதது ஏன்?: தமிழிசை கேள்வி

DIN

காங்கிரஸ் -திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காதது ஏன் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை துவங்கப்பட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. காங்கிரஸ் -திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, தமிழக மக்கள் நலனுக்காக இதுபோன்ற எந்தவொரு முயற்சியும் எடுக்கப்படவில்லை.
தமிழக மக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டுள்ள மத்திய பாஜக அரசின் திட்டத்தை ஏற்று, சில தடங்கல்களை நீக்கி இந்த மருத்துவமனை மதுரையில் அமைய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
இதற்காக முதல்வர் பழனிசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு எனது நன்றிகள் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT