திருப்பதி அருகே செம்மரம் வெட்டச்சென்றதாக 60 க்கு மேற்பட்ட தமிழர்கள் கைது
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த ஆஞ்சநேயபுரம் சோதனை சாவடி 60 க்கும் மேற்பட்ட தமிழர்களை ஆந்திர மாநில செம்மர கடத்தல் தடுப்பு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த ஆஞ்சநேயபுரம் சோதனை சாவடி 60 க்கும் மேற்பட்ட தமிழர்களை ஆந்திர மாநில செம்மர கடத்தல் தடுப்பு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆஞ்சநேயபுரம் சோதனை சாவடியில் சந்தேகத்திற்கு உரிய வகையில் வந்த லாரியில் போலீஸார் சோதனை செய்தனர். அதில் 60 க்கும் மேற்பட்டவர்கள் இருந்துள்ளனர் மேலும் சமையலுக்கு தேவையான பொருட்களும் உடன் இருந்துள்ளது.
மேலும் விசாரனையில் கைது செய்யப்பட்டவர்கள் வேலூர் , திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலம் செம்மரம் வெட்ட கடப்பா நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்து ஆஞ்சநேயபுரம் சோதனை சாவடியில் தங்கவைக்கப்பட்டுள்னர். லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர்.