தமிழ்நாடு

கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி மனு! 

திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி, அவரது மகள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

DIN

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி, அவரது மகள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து. இவரது மகளான ஸ்ரீராணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

கடந்த 2009 முதல் 20102 வரை எனது தந்தையான மு.க.முத்துவை என்னால் பார்க்க இயலவில்லை. பின்னர் 2015-ஆம் ஆண்டு திருவாரூரில் குடும்ப நிகழ்வு ஒன்றில்அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் அவரைச் சந்தித்த தகவல் கிடைத்ததும், எனது சகோதரர் அறிவுநிதி உடனடியாக எனது தந்தையை சென்னைக்கு அழைத்துச் சென்று விட்டார்.

அன்று முதல் இன்றுவரை எனது தந்தை சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார். எனவே அந்த காவலிலிருந்து எனது தந்தையை மீட்டுக் கொடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவானது வியாழன் அன்று நீதிபதிகள் செல்வம் மற்றும் சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் வாதத்தினைக் கேட்ட பிறகு இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க கோரி சென்னை காவல்துறை ஆணையர், மயிலாப்பூர் காவல்துறை இணை ஆணையர் மற்றும் கோட்டூர்புரம் காவல்துறை ஆய்வாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அலையும் அழகும்... இலங்கையில் ஆண்ட்ரியா!

மும்பை: புறநகர் ரயிலில் இருந்து விழுந்து 3 பயணிகள் காயம்

“உள்ளூரை அறிந்துகொள்ளவே சுற்றுலா”: கார்த்திக் முரளி

இஷான் கிஷன் சதம் விளாசி அதிரடி; நியூசிலாந்துக்கு 272 ரன்கள் இலக்கு!

எப்ஸ்டீன் கோப்புகளில் மோடியின் பெயரா? மத்திய அரசு மறுப்பு!

SCROLL FOR NEXT