ராஜீவ் வழக்கு: ரவிச்சந்திரனுக்கு 2 வாரம் பரோல் வழங்கியது மதுரை கிளை நீதிமன்றம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரவிச்சந்திரனுக்கு 2 வார காலம் பரோல் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரவிச்சந்திரனுக்கு 2 வார காலம் பரோல் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
62 வயதாகும் தாயைப் பார்க்கவும் குடும்ப சொத்துகளை பிரிக்கும் பணிகளுக்காகவும் ரவிச்சந்திரன் தரப்பில் 1 மாத காலம் பரோல் கேட்டிருந்த நிலையில், 2 வார கால பரோல் வழங்கி மதுரைக் கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பரோல் காலத்தில் ஊடகங்களையோ அரசியல் கட்சித் தலைவர்களையோ சந்திக்கக் கூடாது என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.