தமிழ்நாடு

குரங்கணி காட்டுத் தீ: தமிழக ஆளுநர் ஆறுதல்

DIN

குரங்கணியில் காட்டுத் தீயில் சிக்கி காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார்.
தேனி மாவட்டம், குரங்கணியில் காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பலத்த காயமடைந்த 16 பேர் மதுரையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் நிஷா என்ற பெண் சிகிச்சை பலனின்றி மதுரை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை இறந்தார்.
இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதைத்தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தீக்காய சிறப்பு சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தேவையான சிகிச்சைகளைத் தொடர்ந்து அளிக்கவும், காயமடைந்தவர்களுக்கு கிருமித்தொற்று ஏற்படாமல் தடுக்க உரிய சிகிச்சை அளிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். 
பின்னர் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், சுகாதாரத் துறைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் ஆகியோர் ஆளுநருடன் உடனிருந்தனர். ஆளுநர் வருகையையொட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT