தமிழ்நாடு

குரங்கணி தீ விபத்து மீட்பு ஹெலிகாப்டருடன் மாணவிகளின் செல்ஃபி: எங்கே செல்கிறது இந்த மோகம்? 

DIN

தேனி: குரங்கணி தீ விபத்து மீட்பு பணிகளுக்காக வந்திருந்த ஹெலிகாப்டருடன், அங்கிருந்த ஆசிரியர் பயிற்சி பள்ளி  மாணவிகள் செல்ஃபி எடுத்துக் கொண்ட விவகாரம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. 

தேனி மாவட்டம் போடிநாயக்கனுர்  அருகே உள்ள குரங்கணி வனப் பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடச் சென்ற 36 பேர், ஞாயிற்றுக்கிழமை அங்கு ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டனர். இவர்களில் சென்னையைச் சேர்ந்த 5 பேர் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர்.

மீட்புப்  பணிகளுக்காக இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று ஞாயிறு அன்று தேனிக்கு வரவழைக்கப்பட்டிருந்தது. இந்த விமானமானது போடிநாயக்கனுர் ஸ்பைசஸ் கல்விக் குழும பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.    

நிறுத்தப்பட்டிருந்த அந்த ஹெலிகாப்டர் அருகே அங்கு பயிலும் ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவிகள்  சென்றனர். ஏதோ உதவி செய்யப்போகிறார்கள் என்று எண்ணிய தருணத்தில் அவர்கள் ஒன்று கூடி செல்ஃபி எடுக்கத் துவங்கினர்.

தனியாகவும், குழுவாகவும் மற்றும் ஆசிரியர்களுடனும் என்றும் மாறி மாறி அவர்கள் புகைப்படம் எடுக்கக்க காட்டிய ஆர்வம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்தது. 

இத்தகைய நடவடிக்கையானது எங்கு சென்று முடிவடையும் இந்த செல்ஃபி மோகம் என்று எண்ணும் படி அமைந்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT