தமிழ்நாடு

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

DIN

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துளளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
காற்றழுத்த தாழ்வுபகுதி காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று மாலத்தீவு அருகே நிலைகொண்டுள்ளது. இது லட்சத்தீவை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்யும். தென்தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக பாபநாசத்தில் 4, தொண்டியில் 2 செ.மீ. மழை பதிவானது.

தென்தமிழகம், குமரி, மாலத்தீவு, லட்சத்தீவுக்கு 2 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். கடலில் காற்றின் வேகம் 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வரை வீசக்கூடும். இவ்வாறு அவர் கூறினார். 

தெற்கு வங்கக் கடலில் கடந்த வெள்ளிக்கிழமை காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மைய பணிகளை நிறுத்திவைக்க அறிவுறுத்தப்படும்: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

கல்லூரி மாணவா் மயங்கி விழுந்து சாவு

ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமி வழக்கில் ‘வக்ஃபு’ சட்டம் பொருந்தாது: ஹிந்துக்கள் தரப்பு வாதம்

SCROLL FOR NEXT