தமிழ்நாடு

ஆயுதப்படை காவலர்கள் இருவர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி! 

தேனி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் இருவர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

சென்னை: தேனி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் இருவர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வருபவர்கள் ரகு மற்றும் கணேஷ் என்னும் காவலர்கள். இவர்கள் இருவரும் புதன்கிழமையன்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொ டுக்க வந்திருந்தனர்.

புகார் கொடுத்து விட்டு வெளியே வந்த இருவரும் அலுவலக வாசலில் தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த டிஜிபி அலுவலக் காவல் பணியில் இருந்த காவலர்கள் மற்றும் மயிலாப்பூர் போக்குவரத்து  காவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களைப் பாதுகாப்பாக மயிலாப்பூர் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

முதல்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் தேனி மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வருவதும், சமீபத்தில் அவர்கள் இருவரும் ராமநாதபுரம் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்தது.

தங்கள் மேல் தவறு இல்லாத போதும், பழி வாங்கும் நோக்கத்துடனும், ஜாதி ரீதியான கண்ணோட்டத்துடன் மேலதிகாரிகள் நடந்து கொள்வதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

அதன் காரணமாகவே புகார் கொடுக்க வந்தவர்கள் பின்னர் தற்கொலைக்கு முயன்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயியை வெட்டிக்கொல்ல முயற்சி

வசீகரத்தின் உறைவிடம்... ஜொனிதா காந்தி!

சுவர் இருப்பின் சித்திரம்... நிகிதா ஷர்மா!

காஷ்மீரில் சண்டை எப்போது முடிவுக்கு வரும்? ஃபரூக் அப்துல்லா பதில்!

ஊட்டல் தேவஸ்தானத்தில் ஆடிப்பெருக்கு விழா

SCROLL FOR NEXT