ரூ.5 லட்சம் லஞ்சம்: சென்னை பொது கணக்காளர் சிபிஐ அதிகாரிகளால் கைது
ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்ற பொது கணக்காளர் அருண் கோயல் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் சிபிஐ அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்ற பொது கணக்காளர் அருண் கோயல் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் சிபிஐ அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை தேனாம்பேட்டையிலுள்ள பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் காலை 10 மணி முதல் சோதனை செய்ததாக தகவல்கள் வெளியாகின.
இங்குள்ள பொது கணக்காளர்கள் ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Advertisement
இந்நிலையில், ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில் பொது கணக்காளர் அருண் கோயல் மற்றும் மூத்த கணக்கு அலுவலர் கஜேந்திரன் ஆகியோர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில் மேலும் இரண்டு பேரை சிபிஐ கைது செய்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்டவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.