தமிழ்நாடு

இரண்டு மாதத்தில் குரங்கணி காட்டுத்தீ விசாரணை அறிக்கை: அதுல்ய மிஸ்ரா தகவல்!

DIN

தேனி: தேனி மாவட்டம் குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்பான விசாரணை அறிக்கை இன்னும் இரண்டு மாதத்தில் சமர்ப்பிக்கப்படும், என அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரியான அதுல்ய மிஸ்ரா தெரிவித்து உள்ளார்.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது குரங்கணி மலைப்பகுதி. இங்கு கடந்த 11-ந் தேதி காட்டுத்தீ பரவியது. எதிர்பாராமல் உண்டான இதில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் சிக்கிக் கொண்டனர். இந்த தீ விபத்தில் இதுவரை 20 பேர் உயிர் இழந்துள்ளனர். மேலும் சிலர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்த இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மைச் செயலாளரும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான அதுல்யா மிஸ்ரா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து விசாரணையை தொடங்கிய அதிகாரி அதுல்யா மிஸ்ரா, சம்பவ இடமான குரங்கணி மலைப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். விசாரணை தொடர்பாக அதுல்ய மிஸ்ரா செய்தியாளர்களிடம் வெள்ளியன்று பேசியாதவது:

காட்டுத்தீ தொடர்பாக பொதுமக்கள் 32 பேரிடமும், அரசு அதிகாரிகள் 41 பேரிடமும் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை அறிக்கை 2 மாதத்தில் சமர்ப்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT