தமிழ்நாடு

தன்னலமற்ற மக்கள் சேவையில் முன்னுதாரணமாக திகழ வேண்டும்: மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி அறிவுரை

தினமணி

தன்னலமற்ற மக்கள் சேவையில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று தமது மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை வழங்கியுள்ளார்.
 இதுகுறித்து ரஜினி மக்கள் மன்றம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:
 தன்னலமற்ற மக்கள் சேவை என்ற புனிதமான உயர்ந்த எண்ணத்தோடும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. தூய்மையான அரசியலை முன்னிறுத்தி, பொதுமக்களுக்கு சேவை புரிவதற்காக தொடங்கப்பட்டுள்ள இந்த அமைப்பில், பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் பொறுப்புகளில் நியமிக்கப்படலாம்.
 அவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் மன்றத்தின் குறிக்கோளுக்கேற்ப செயல்படாதபட்சத்தில், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, மன்றத்தை சரியான பாதையில் நடத்திச் செல்வது தலைமையின் கடமை. சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் மன்றப் பொறுப்புகளில் உரிய நேர்காணலுக்குப் பிறகு நேர்மையான, வெளிப்படையான முறையில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது அனைத்து மன்ற உறுப்பினர்களும் அறிந்ததே.
 மன்றத்தில் இடமில்லை: இதில் பொதுநலம் விடுத்து தங்கள் சுயநலத்துக்காக சிலர் செயல்பட முயற்சி செய்வதும், அத்தகைய முயற்சி நிறைவேறாதபட்சத்தில் மன்றத்தின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்க முயல்வதும் மக்கள் விரோத செயல் என்பதால், அவை ஒருபோதும் அனுமதிக்கப்படாது.
 அத்தகைய செயல்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு மன்றத்தில் இடமில்லை. இதுநாள் வரை காத்து வந்த நமது ஒற்றுமையையும், கட்டுப்பாட்டையும் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்னத்தூா் அருகே கா்ப்பிணி மனைவி, கணவருடன் தூக்கிட்டு தற்கொலை

ரயிலில் அடிபட்ட பெண் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மெக்கானிக் பலி

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: 1,352 வேட்பாளா்களில் 9% போ் மட்டுமே பெண்கள்

தங்கம் விலை: பவுன் ரூ.240 குறைவு

SCROLL FOR NEXT