சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சென்னைப் பெண் ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.
தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த 11-ந் தேதி அன்று காட்டுத்தீ பற்றிக் கொண்டது. இதில் சென்னை மற்றும் ஈரோடு பகுதிகளில் இருந்து மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிக் கொண்டனர்.
பலத்த போராட்டத்திற்குப் பிறகு இவர்களில் பலர் உயிருடன் மீட்கப்பட்டனர். 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்தில் சிக்கி தீக்காயம் அடைந்தவர்கள் மதுரை, கோவை, சென்னை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் சிகிச்சை பலனன்றி 11 பேர் அடுத்தடுத்து இறந்து போனார்கள்.
இந்த நிலையில் வானகரம் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னையைச் சேர்ந்த பார்கவி (26) சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து குரங்கணி காட்டுத் தீயில் பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.