தமிழ்நாடு

தேனியில் நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் அனுமதி 

Raghavendran

தேனியில் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்துக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் திங்கள்கிழமை அனுமதி வழங்கியது.

நியூட்ரினோ திட்டத்துக்காக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நாள் ஒன்றுக்கு 340 கி.லி. தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இத்திட்டத்தைசெயல்படுத்தும் டாடா நிறுவனத்துக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதை அமல்படுத்த தமிழக அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தி, நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தும் டாடா நிறுவனத்துக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் நிபந்தனை விதித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த திட்டத்துக்கு ஆட்சேபனை இருந்தால் 30 நாட்களுக்குள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரலாம் எனவும் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த 2011-ஆம் ஆண்டு நடவடிக்கை மேற்கொண்டது. இந்த ஆய்வகம் அமைப்பதற்கான முதல் கட்ட பணிகளும் தொடங்கப்பட்டன.

இதற்கிடையே, இந்த ஆய்வகம் அமைப்பதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று எதிர்ப்பு தெரிவித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், இத்திட்டத்துக்கு அனுமதி மறுத்தது. இதனால், ஆய்வகம் அமைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. அனுமதியைப் பெறுவதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில், தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆய்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்தத் திட்டத்தை முழுமையாக ஏற்பதாகவும், இந்தத் திட்டத்தால் கதிர் வீச்சு அபாயம் இருக்காது என்றும் அந்தக் குழு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் தொடர்பாக, பொதுமக்களிடம் கருத்துகளை கேட்க வேண்டியதில்லை என்றும் அந்தக் குழு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

SCROLL FOR NEXT