முகப்பு
தமிழ்நாடு

மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக அரசு முடிவு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 29 மார்ச், 2018 at 5:58 PM
பகிர்:


சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த 6 வாரக் காலக்கெடு இன்றுடன் நிறைவடையும் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

நாளை உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால் சனிக்கிழமை காலை, தமிழக அரசு தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும், திங்கட்கிழமை அன்று, தமிழக அரசின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரத் தேவையான ஆவணங்களை தமிழக அரசின் வழக்குரைஞர் சேகர் நாப்தே தயாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.