தமிழ்நாடு

கால அவகாசம் கேட்பது ஏமாற்று வேலை, வாரியம் அமைக்க கூடாது என மத்திய அரசு உறுதி: திமுக தாக்கு

Raghavendran

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் சனிக்கிழமை அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதற்கிடையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாதம் அவகாசம் கோரி மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. மேலும் காவிரி விவகாரம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள திட்டம் (ஸ்கீம்) எனும் வார்த்தை குறித்தும் விளக்கம் கேட்டுள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியமா? அல்லது குழுவா? என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. வாரியம் அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்பது ஏமாற்று வேலை என திமுக தலைவர்கள் கனிமொழி எம்.பி மற்றும் துரைமுருகன் ஆகியோர் விமரிசித்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு 3 மாதம் அவகாசம் கேட்பது ஏமாற்று வேலை, அவர்கள் நடவடிக்கை எல்லாமே நாடகம் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. வாரியம் அமைக்க காலம் தாழ்த்துவதற்கான வழிமுறைகளை மத்திய அரசு செய்கிறது என்று திமுக மகளிர் அணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

SCROLL FOR NEXT