தமிழ்நாடு

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை

DIN

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் வெள்ளிக்கிழமை முதல் தடை விதித்துள்ளனர்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் மழைபெய்து வந்ததால் கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டது.
தொடர்ந்து 3 நாள்கள் நீர்வரத்து சீராக இருந்த நிலையில், வியாழக்கிழமை இரவு கொடைக்கானல் மற்றும் பெரியகுளம் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடைவிதித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை கால பயிா்களில் வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

SCROLL FOR NEXT