தமிழ்நாடு

கஸ்தூரி மகாலிங்கம் கல்விச் செலவை தமிழக அரசு ஏற்கும்: முதல்வர் பழனிசாமி உறுதி

Raghavendran

நீட் தேர்வு எழுத மகனை எர்ணாகுளம் அழைத்துச்சென்ற திருத்துறைப்பூண்டிச் சேர்ந்த கிருஷ்ணசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஞாயிற்றுக்கிழமை மரணம் அடைந்தார். தந்தை மரணமடைந்தது தெரியாமல் மகன் கஸ்தூரி மகாலிங்கம் நீட் நுழைவு தேர்வு எழுதினார். 

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணசாமி குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்தார். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டார். கிருஷ்ணசாமியின் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார் 

அதுமட்டுமல்லாமல் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் மனைவிக்கு தொலைபேசி வழியாக ஆறுதல் கூறினார். மகனுக்கு தாங்கள்தான் தைரியம் கூறவேண்டும் என்று அப்போது கேட்டுக்கொண்டார் மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் முழு கல்விச் செலவையும் தமிழக அரசு ஏற்கும் எனவும் உறுதியளித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

SCROLL FOR NEXT