முகப்பு
தமிழ்நாடு

ஜெயலலிதா அறிவித்த திட்டங்களில் 95% நிறைவேற்றப்பட்டுள்ளது: முதல்வர் பழனிசாமி 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களில் 95% நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி  பேசியுள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:59 PM
பகிர்:

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களில் 95% நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி  பேசியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திங்கள் மாலை துவங்கியது. இந்த கூட்டத்தில் அதிமுக வழிகாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களில் 95% நிறைவேற்றப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி  பேசியுள்ளார்.

கூட்டத்தில் அவர் கூறியதாவது:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்த திட்டங்களில் 95% திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது.

இருசக்கர வாகனத்தின் இரண்டு சக்கரங்கள் போல கட்சியும் ஆட்சியும் அமைந்துள்ளது.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.   

முழு கட்டுரையைப் படிக்க →