தமிழ்நாடு

கிருஷ்ணசாமியின் பிள்ளைகளுக்கு அரசு என்ன பதில் சொல்லும்? கனிமொழி எம்பி கேள்வி

Raghavendran

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி விளக்குடியைச் சேர்ந்தவர் ரமேஷ் (எ) கிருஷ்ணசாமி (47), மகனை நீட் தேர்வுக்காக கேரள மாநிலம் எர்ணாகுளம் அழைத்துச் சென்றார். 

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தேர்வின் போது மகனை தேர்வறைக்குள் விட்டுவிட்டு வெளியே காத்திருந்தபோது கிருஷ்ணசாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்நிலையில், திமுக மாநிலங்களை உறுப்பினர் கனிமொழி, மறைந்த கிருஷ்ணசாமி உடலுக்கு திங்கள்கிழமை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்திதபோது கனிமொழி கூறியதாவது:

மாணவர்கள், பெற்றோர்களை தவிக்க விடும் நீட் தேர்வு அவசியமா என அரசு சிந்திக்க வேண்டும். கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றுவதே சரியான தீர்வு. கிருஷ்ணசாமியின் பிள்ளைகளுக்கு அரசு என்ன பதில் சொல்லும்? என்று கேள்வி எழுப்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு பணம்? திரிணமூல் மீது பாஜக குற்றச்சாட்டு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கு தமிழக அரசு அனுமதி

ரோஹித் சர்மாவின் குற்றச்சாட்டை மறுத்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!

தில்லியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT