முகப்பு
தமிழ்நாடு

சரக்கு ஆட்டோ மீது  கார் மோதல்: 2 பேர் சாவு

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே ஆட்டோ மீது கார் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 11 பேர் பலத்த காயமடைந்தனர்.

Updated On : 15 மே, 2018 at 2:36 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே ஆட்டோ மீது கார் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 11 பேர் பலத்த காயமடைந்தனர்.
பெங்களூரைச் சேர்ந்த கோபால் மனைவி லட்சுமி (65), வைஷ்ணவி (13), வெங்கடேசன் (45), அருண்குமார் (34), சரவணன் மகன் ஜோனத் (17), சின்னராஜி மகன் சீனு, வெங்கடேசன் மகன் பரத் (10), துளசி (39), வேலூர் பாகாயத்தைச் சேர்ந்த சீனிவாஸ் மனைவி அனு (36), சீனுவாஸ் மகன் மதன் (15), அருண்குமார் மகன் கருணாஸ்கர் (8), வெங்கடேசன் மகள் வைஷ்ணவி (13) ஆகியோர் வேளாங்கண்ணி கோயிலுக்குச் சென்றுவிட்டு, வேலூர் நோக்கி திங்கள்கிழமை காரில் வந்து கொண்டிருந்தனர். காரை சின்னராஜி மகன் சீனு (42) ஓட்டினார்.
வேலூர் குடியாத்தத்தில் இருந்து சரக்கு ஆட்டோவில் கோணிப் பைகளை ஏற்றிக் கொண்டு, ராமசாமி மகன் ரவி (52), ஓட்டுநர் சுரேஷ் (30) ஆகியோர் செங்கத்துக்குச் சென்று கொண்டிருந்தனர்.
போளுரை அடுத்துள்ள எட்டிவாடி அருகே வந்த போது, சரக்கு ஆட்டோ மீது கார் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த வைஷ்ணவி, சரக்கு ஆட்டோவில் பயணம் செய்த ரவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லட்சுமி, வெங்கடேசன், சரக்கு ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் உள்பட 11 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து களம்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.