முகப்பு
தமிழ்நாடு

முதல்வர், அமைச்சர் குறித்து அவதூறு: அமமுக நிர்வாகி கைது

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் குறித்து சமூக வலைதளங்கள் மூலம் அவதூறு பரப்பியதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக

Updated On : 15 மே, 2018 at 1:50 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் குறித்து சமூக வலைதளங்கள் மூலம் அவதூறு பரப்பியதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். 
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள தேவம்பாளையத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (29). இவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் திருச்செங்கோடு ஒன்றியச் செயலராக உள்ளார். 
இவர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பி வந்துள்ளார். இதுகுறித்து கலியனூர் அக்ரஹாரத்தைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலர் குமரேசன் அளித்த புகாரின்பேரில், பள்ளிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தினேஷை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.