தமிழ்நாடு

முதுநிலை இயன்முறைப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

முதுநிலை இயன்முறை (பிசியோதெரபி)மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் கல்லூரிகளில் உள்ள முதுநிலை இயன்முறை மருத்துவப்படிப்பில் (எம்.பி.டி.) 2018 -19 -ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இடஒதுக்கீடு, இளநிலைப் படிப்பில் பெற்ற மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnhealth.org www.tn medicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய முடியும். நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது. 
விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய மே 22 -ஆம் தேதி கடைசியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு மே 23 -ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT