தமிழ்நாடு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்: போலீஸ் தடியடியில் சிக்கி இரண்டு பேர்  பலி

DIN


தூத்துக்குடி: ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, காவல்துறையினர் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதால், இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் படுகாயம் அடைந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்களை வெளியேற்ற காவல்துறையினர், தடியடி நடத்தினர். இதில் ஏராளமான கிராம மக்கள் காயமடைந்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் யாரும் நுழைய முடியாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டதால் உள்ளே என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், காவல்துறையின் தடியடியில் சிக்கி இரண்டு பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடப்பதையும், இளைஞர் ஒருவர் காயத்தோடு எழுந்து நடக்க முடியாமல் அலறுவதும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் ஆத்திரம் அடைந்து, அங்கே இருந்த காவல்துறை வாகனத்தை அடித்து நொறுக்கி, கவிழ்த்துப் போட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாா்: கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறிய அமித் ஷா சென்ற ஹெலிகாப்டா்- பைலட் சமாா்த்தியத்தால் விபத்து தவிா்ப்பு

கென்யா: அணை உடைந்து 45 போ் உயிரிழப்பு

நியாயமான முறையில் வட்டி வசூலிக்க வேண்டும்: வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தல்

வேட்டமங்கலத்தில் மாநில கையுந்துப் பந்து போட்டி

உணவு பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

SCROLL FOR NEXT