தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்  உத்தரவு

DIN

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடல்களை மறு உத்தரவு வரும்வரை பதப்படுத்தி வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி விசாரிக்க வேண்டி உத்தரவிட கோரி 3 வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர் . அந்த  மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் புதனன்று நடைபெற்றது.

மூன்று வழக்கறிஞர்களின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் சங்கரசுப்பு, "தூத்துக்குடி சம்பவம் தற்செயலாக நடந்தது அல்ல, திட்டமிட்டு நடத்தப்பட்டது. 15 நாட்களுக்கு முன்பே போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், மாவட்ட நிர்வாகம் போராட்டக்காரர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை" என்று தெரிவித்தார்.

அப்பொழுது நீதிபதிகள், "நீதிமன்றத்திற்கு வெளியே நடப்பது ஏதுவும் தெரியாமல் நாங்கள் இங்கே உட்காந்திருக்கிறோம் என நினைக்க வேண்டாம்,நாங்கள் இங்கு இருப்பதால் அனைவரையும் சட்டத்தின் பார்வையில்தான் பார்க்கிறோம்" என்று அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞருக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், மறு உத்தரவு வரும் வரை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட உடல்களை பதப்படுத்தி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைகள்

SCROLL FOR NEXT