தூத்துக்குடியில் பேருந்து சேவை தொடக்கம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்ட காரணத்தால் முடங்கியிருந்த பேருந்து சேவை 3 நாட்களுக்கு பிறகு போலீஸார் பாதுகாப்புடன் இன்று தொடங்கியது.
தமிழ்நாடுதூத்துக்குடியில் பேருந்து சேவை தொடக்கம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்ட காரணத்தால் முடங்கியிருந்த பேருந்து சேவை 3 நாட்களுக்கு பிறகு போலீஸார் பாதுகாப்புடன் இன்று தொடங்கியது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100-ஆவது நாள் போராட்டம் வன்முறை மற்றும் காவல் துறையினர் தூப்பாக்கிச் சூட்டில் முடிந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில் தற்போது வரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அசாதாரண சூழ்நிலையால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
பேருந்து சேவை நிறுத்தத்தை தொடர்ந்து, 144 தடை உத்தரவு நீட்டிப்பு, இணையதள சேவை முடக்கம் என அடுத்தடுத்த நடவடிக்கையால் தூத்துக்குடி மாவட்டமே முற்றிலும் ஸ்தம்பித்து போனது.
இதையடுத்து, காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து எதிர்கட்சியினர் இன்று (வெள்ளிக்கிழமை) மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்தன.
இந்நிலையில், 3 நாட்களுக்கு பிறகு தூத்துக்குடியில் பேருந்து சேவை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டது. அதுவும் காவல் துறையினரின் பாதுகாப்புடனே இயக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, படிப்படியாக இந்த பேருந்து சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.