தமிழ்நாடு

எட்டு தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று முதல்வர் கூறினாரா? ஓ. பன்னீர்செல்வம் விளக்கம்

நான்கோ, எட்டோ என்று கூறவில்லை, 20 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றுதான் முதல்வர் கூறினார் என துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

DIN


சென்னை: நான்கோ, எட்டோ என்று கூறவில்லை, 20 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றுதான் முதல்வர் கூறினார் என துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியதாவது, திமுக தலைவர் ஸ்டாலினும் டிடிவி தினகரனும் பல முறை ரகசியமாக சந்தித்ததாக தகவல்கள் வந்துள்ளன. 20 தொகுதிகளில் விரைவில் இடைத் தேர்தல் நடைபெறும் என்பதால் அதிமுக தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. அவர்களும் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டனர் என்று கூறினார்.

20 தொகுதிகளுக்கு நடக்கும் இடைத் தேர்தலில் நிச்சயம் 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கூறியதாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், குறைந்தது 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் ஆட்சியைத் தக்க வைக்க முடியும் என்று அதிமுக கூட்டத்தில் முதல்வர் கூறியதாக தகவல் வெளியானது குறித்து கேட்டதற்கு, நான்கோ, எட்டோ என்று கூறவில்லை, 20 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றுதான் முதல்வர் கூறினார். எந்த சூழ்நிலையிலும் 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் முதல்வர் பழனிசாமி அவ்வாறு கூறவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், பிரிந்து சென்றவர்களை அழைப்பது எங்களது பெருந்தன்மை. அழைப்பை ஏற்பதும், ஏற்காததும் அவர்களது மனநிலை. வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

அதிமுகவில் இருக்கும் ஸ்லீப்பர் செல் கடம்பூர் ராஜூ என்று முன்னாள் எம்எல்ஏ கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்த பேச்சு குறித்து கடம்பூர் ராஜூ மற்றும் முன்னாள் எம்எல்ஏ மார்கண்டேயனிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிக்கப் பிறந்தவர்கள் தனுசு ராசிக்காரர்கள்!

புதிய சீரியலில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா!

இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி; டெஸ்ட் தொடர் சமன்!

அடுத்த 4 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

நண்பர்களைத் தவிர்த்து... குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!

SCROLL FOR NEXT