தமிழ்நாடு

டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை: பொறியியல் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்

DIN

டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்களை தொழில்
 நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
 தமிழகத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு பொதுமக்களும், பள்ளிகள், நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தினரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
 அது போன்று, கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை எடுக்க பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளை தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. அதனுடன், வருவாய் துறை ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலர் சார்பில் வெளியிடப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக கடிதத்தையும் இயக்குநர் அலுவலகம் இணைத்துள்ளது.
 அதில், டெங்கு கொசு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்துவதோடு, கல்லூரி வளாகங்களைத் தூய்மையாகவும், தண்ணீர் தேங்காமலும் வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறின்றி, கல்லூரி வளாகங்களில் கொசு உற்பத்தி மற்றும் லார்வா புழு உற்பத்திக்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டால் ரூ.5,000 முதல் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT