தமிழ்நாடு

கஜா புயல் எதிரொலி: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு

DIN


கஜா புயல் நாளை கரையைக் கடப்பதை அடுத்து திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கஜா புயல் நாளை (வியாழக்கிழமை) பாம்பன் - கடலூர் இடையே கரையைக் கடக்கிறது. கஜா புயல் காரணமாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திருவாரூர், காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.  

ஆனால், திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்தார். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் விடுத்த எச்சரிக்கையத் தொடர்ந்து, தேர்வை ஒத்திவைப்பதாக பதிவாளர் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, தற்போது தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகளும் வரும் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 

சற்று முன் நிலவரப்படி, கஜா புயல் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் சென்னைக்கு தென்கிழக்கே 430 கி.மீ தொலைவிலும் நாகைக்கு 510 கி.மீ. தொலைவிலும் நகர்ந்து வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT