தமிழ்நாடு

ஊழியர்களை 4 மணிக்குள் வீட்டுக்கு அனுப்புமாறு வருவாய் நிர்வாக ஆணையர் அறிவுறுத்தல்

DIN


சென்னை: கஜா புயல் கரையைக் கடக்கும் பகுதியை சுற்றியுள்ள 6 மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்களை விரைவாக வீட்டுக்கு அனுப்ப தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் இன்று இரவு 8 - 11 மணிக்குள் நாகைக்கு அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் அனைத்தும் தங்களது ஊழியர்கள் 4 மணிக்குள் வீட்டுக்குச் செல்லும் வகையில் 3 அல்லது 3.30 மணிக்குள் அனுப்பிவிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நாகை மாவட்டத்துக்கு 4 பேரிடர் மேலாண்மை குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

+2 தேர்வில் அசத்திய நாங்குனேரி மாணவர் சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

SCROLL FOR NEXT