தமிழ்நாடு

கஜா புயல்  எதிரொலி: முதல்வர் இன்று நேரில் ஆய்வு

DIN

"கஜா' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்கிறார்.
இதற்காக, சென்னையில் இருந்து காலை 5.45 -க்கு விமானத்தில் திருச்சி சென்று. அங்கிருந்து, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம்  முதல்வர் பார்வையிடுகிறார். சில இடங்களில் களத்தில் இறங்கி அவர் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. மாலையில் திருச்சியில் இருந்து விமானத்தில் சென்னை திரும்புகிறார்.
ஆளுநரும் ஆய்வு:  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காரைக்கால், நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் புதன்கிழமை நேரில் ஆய்வு  செய்கிறார். இதற்காக அவர், ரயிலில் செவ்வாய்க்கிழமை செல்கிறார் என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT