தமிழ்நாடு

திருவாரூரில் 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு 

கஜா புயல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

திருவாரூர்: கஜா புயல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளில் இன்னும் முழுமையான நிவாரணம் இல்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைபட்டதால் அத்தியாவசிய தேவையான குடிநீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும்  பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில் அமைக்கப்பட்ட மாற்று முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் கஜா புயல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மாவட்டத்தில் மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம் ஆகிய தாலுகாக்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் திருவாரூர், குடவாசல், வலங்கைமான், நன்னிலம், கொரடாச்சேரியில் பள்ளிகளில் முகாம்கள் இயங்கி வந்தால் நாளை பள்ளி விடுமுறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT