தமிழ்நாடு

புயல் பாதிப்பு மாவட்டங்களில் 97 ஆம்புலன்ஸ் வாகனங்கள்

DIN


புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அவசர கால மருத்துவ உதவிகளை வழங்கும் பணிகளில் 97 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக 108 சேவை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாகப்பட்டினத்தில் புயல் மீட்பு சேவைகளுக்காக 12 வாகனங்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு மொத்தம் 33 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, திருவாரூரில் 18 வாகனங்களும், தஞ்சாவூரில் 22 வாகனங்களும், புதுக்கோட்டையில் 24 வாகனங்களும் இயக்கப்பட்டு வருவதாக 108 சேவை மையம் கூறியுள்ளது.
கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக நூற்றுக்கணக்கான ஊழியர்கள் அதற்கான சிறப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், தேவைப்படும் மருத்துவத் தகவல்களை வழங்கும் பணிகளை மருத்துவர்களும், செவிலியர்களும் மேற்கொண்டு வருவதாகவும் 108 அவசரகால சேவை மையம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT