தமிழ்நாடு

கஜா நிவாரணம்: ஒரு மாத ஊதியத்தை வழங்கிய ஆளுநர் பன்வாரிலால் 

DIN

சென்னை: கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கியுள்ளார். 

தமிழகத்தை கடந்த 16ந்தேதி தாக்கிய கஜா புயலினால் டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும்  நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்தன.

பல லட்சம் தென்னை, பலா மற்றும் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன.  வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் நாசமானது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. இதற்காக மத்திய அரசிடம் தமிழக அரசு ரூ.15 ஆயிரம் கோடி  நிதியுதவி கூறியுள்ளது. பின்னர் மத்திய குழு ஒன்று 3 நாட்களாக புயல் பாதித்த பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்தது.   

கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக நிதி வழங்கி வருகிறார்கள். தனியார் நிறுவனங்களும், பிரமுகர்களும் நிவாரண நிதி அளித்து வருகிறார்கள்.  அதிமுக மற்றும் திமுக கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளித்தனர்.

இந்நிலையில் கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT