தமிழ்நாடு

தமிழகத்தில் லோக் ஆயுக்த அமைக்க முதற்கட்ட பணிகள் துவக்கம்: அரசாணை வெளியீடு

DIN

சென்னை: தமிழகத்தில் 'லோக் ஆயுக்த' அமைப்பினை உருவாக்க முதற்கட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

அனைத்து மாநிலங்களிலும் அரசுத் துறைகளில் நடைபெறும் ஊழல்களை சுதந்திரமாகக் கண்டறிந்து விசாரிக்க, கடந்த 2013-ம் ஆண்டு, ‘லோக் ஆயுக்தா’ மற்றும் ‘லோக்பால்’ சட்டம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் ஊழல்களுக்கு எதிராக எந்த ஒரு தனி மனிதனும் வெளிப்படையாக வழக்குத் தொடர முடியும் என்று கூறப்பட்டது.   

அதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்ற உத்தரவின் படி கடந்த ஜூலை மாதம் 9-ஆம் தேதியன்று 'லோக் ஆயுக்த' அமைப்பினை தமிழகத்தில் உருவாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் 'லோக் ஆயுக்த' அமைப்பினை உருவாக்க முதற்கட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளதாக வியாழனன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

முதல்கட்ட பணிகளுக்கு என 28 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதற்கான ஆணையும் இந்த அரசாணையுடன் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT